இந்தியா

அசாம்: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக சென்சார் காலணியை வடிவமைத்த 9ஆம் வகுப்பு மாணவன் 

DIN

அசாமைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக சென்சார் காலணியை உருவாக்கியுள்ளார்.

அசாம் மாநிலம், கரிம்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அன்குரித் கர்மாகர். இம்மாணவன் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக சென்சார் காலணியை வடிவமைத்துள்ளார். பார்வையற்றோர் இந்த காலணியை அணிந்துசெல்லும்போது வழியில் ஏதேனும் தடைகள் வந்தால் உடனடியாக இதிலுள்ள சென்சார் ஒலியை எழுப்பி அவர்களை எச்சரிக்கை செய்கிறது. 

இதுகுறித்து மாணவன் அன்குரித் கூறியதாவது, பார்வையற்றவர்களுக்காக இந்த ஸ்மார்ட் காலணியைத் தயாரித்துள்ளேன். இதில் ஒரு காலணியில் சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது. அது வழியில் வரும் தடைகளைக் கண்டறிந்து ஒலியை எழுப்பும் தன்மையுடையது. விஞ்ஞானி ஆவதே எனது நோக்கம்.

மக்களுக்கு உதவும் மற்றும் அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இதுபோன்ற பணிகளை மேலும் செய்வேன். இவ்வாறு  அவர் தெரிவித்தார். இதனிடையே மாணவனின் இந்த கண்டுபிடிப்பை பலர் பாராட்டி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT