முகப்பு
இந்தியா

தாணே: பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து 

தாணே ஜில்லா பரிஷத்தின் சுகாதாரத் துறையின் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
பகிர்:

தாணே ஜில்லா பரிஷத்தின் சுகாதாரத் துறையின் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஸ்டேஷன் சாலையில் உள்ள ஜில்லா பரிஷத் தலைமையகம் அருகே அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையிலிருந்த புகைப்பட நகல் இயந்திரம் மற்றும் கேபிள்கள் எரிந்து நாசமானது.

தாணே முனிசிபன் நிறுவனத்தின், பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு குழுவினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.