இந்தியா

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மருத்துவமனையில் அனுமதி

ஊழல் வழக்கில் சிக்சி சிபிஜ காவலில் உள்ள மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

DIN

ஊழல் வழக்கில் சிக்சி சிபிஜ காவலில் உள்ள மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

71 வயதான என்சிபி தலைவர் தேஷ்முக் ஆர்தர் ரோடு சிறையிலிருந்து ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் எலும்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரின் நோய் குறித்த விவரங்களை மருத்துவ அதிகாரி தெளிவாகத் தெரிவிக்கவில்லை

பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரை அமலாக்கத் துறையினர் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைது செய்தது. 

கடந்த வாரம், தனி ஊழல் வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு(சிபிஐ) மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூங்காத விழிகள் இரண்டு... ஸ்ரீநந்தா சங்கர்!

சீரற்ற சீர்... மன்மீத் கௌர்!

தமிழ்நாட்டின் 35-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக 16 வயது இளம்பரிதி!

கோவாவில் குதூகலம்... ரஜிஷா விஜயன்!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT