இந்தியா

தெலங்கானாவில் மின் கட்டணம் 14% உயர்வு

DIN

தெலங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக மின் கட்டணம் 50 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.1.45-ல் இருந்து ரூ.1.95 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணம் ரூ.2.60-ல் இருந்து ரூ.3.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
சலூன் கடைகள் உள்பட சிறு தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரங்களுக்கான மின் கட்டணத்தில் மாற்றமில்லை என்று தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.

மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்ததாக தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT