கோயிலில் திருடி மாட்டி கொண்ட திருடன் 
இந்தியா

கலகலப்பு பட பாணியில் கோயிலில் திருடி மாட்டி கொண்ட திருடன்

கடவுள் சிலையின் மூக்குத்தி மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடி அதனை கோயில் சுவரின் ஓட்டை வழியே திருடன் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருப்பதை பார்த்ததாக கோயில் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

DIN

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜமி எல்லம்மா கோயிலில் ஒன்பது கிராம் வெள்ளி ஆபரணங்களை திருடி துவாரம் வழியே தப்பித்து செல்லும்போது திருடன் அதில் சிக்கி கொண்ட சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாக பேசிய காஞ்சிலி காவல்துறை ஆய்வாளர் சீரஞ்சிவி, "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜமி எல்லம்மா கோயிலிலிருந்து பாபா ராவ் என்ற திருடன் ஒன்பது கிராம் வெள்ளியை திருடியுள்ளார். கோயில் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே சென்றிருக்கிறார்.

வெளியே தப்பித்து செல்லும்போது அந்த ஓட்டையிலே சிக்கி கொண்டார். கையும் களவுமாக சிக்கி கொண்ட திருடனை காவலில் எடுத்துள்ளோம்" என்றார்.

கடவுள் சிலையின் மூக்குத்தி மற்றும் வெள்ளி ஆபரணங்களை திருடி அதனை கோயில் சுவரின் ஓட்டை வழியே திருடன் வெளியே தூக்கி எறிந்து கொண்டிருப்பதை கோயில் உரிமையாளர் பார்த்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன் நடந்ததில்லை. ஒரு துளை வழியாக திருடன் உள்ளே நுழைந்தான். ஆனால் வெளியே செல்ல முடியவில்லை. அவர் சிலையின் மூக்குத்தி மற்றும் பிற வெள்ளி ஆபரணங்களை வெளியே எறிந்து கொண்டிருக்கும்போது நான் பார்த்தேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT