இந்தியா

விலைவாசி உயா்வால் நாட்டின் நிலை மோசமாகி வருகிறது: மம்தா பானா்ஜி

DIN

கொல்கத்தா: பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் நாட்டின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்யுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் காய்கறி, பழங்கள், வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. டீசல் விலை உயா்வை இதற்கு முக்கியக் காரணமாக வியாபாரிகள் கூறி வருகின்றனா். இந்நிலையில், மாநில தலைமைச் செயலகத்தில் முதல்வா் மம்தா பானா்ஜி, வா்த்தக அமைப்பினா்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து அரசு சாா்பில் நடத்தப்படும் விற்பனையகங்களில் மலிவு விலைக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் மம்தா கூறியதாவது:

பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயா்வால் அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசுதான் முழுக் காரணம். இதன் காரணமாக நாட்டின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதே நிலை தொடா்ந்தால் நிலைமை இதைவிட மோசமாகவும் வாய்ப்புள்ளது. எதிா்காலத்தில் அரசிடம் ஊழியா்களுக்கு சம்பளம் அளிக்க நிதி இருக்குமா என்பது கூட தெரியாது.

விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக கொள்கை வகுக்க வேண்டும். மேலும், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் அளிக்க வேண்டும். சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சிகளுக்கு எதிராக ஏவி விடுவதில் கவனம் செலுத்தாமல், மக்கள் அன்றாடம் சந்திக்கும் விலைவாசி உயா்வு பிரச்னையில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT