இந்தியா

அசாமின் சிவசாகரில் 144 தடை உத்தரவு

DIN

சமூக விரோத செயல்களைத் தடுக்கும் வகையில், அசாமின் எல்லையோர மாவட்டமான சிவசாகரில் 144 தடை உத்தரவும், நகாலாந்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 60 நாட்களுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்.

எல்லையில் மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை வாகனங்களில் சுற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐபிசியின் 188வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் கூடுவதற்கும், கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணாக்கள், பேரணிகள், சுவரொட்டிகள், பதாகைகள், கோஷங்களை எழுதுவது இந்த காலகட்டத்தில் கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

சமூக விரோத மற்றும் தீவிரவாத செயல்களான, துப்பாக்கிச் சூடு, கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இருப்பினும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெண்கள், அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரிபேக்குகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்டம் முழுவதும் புகையிலை பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT