இந்தியா

அசாமிலிருந்து துபைக்கு பறக்கும் பலாப்பழம், பச்சைமிளகாய்

PTI


துப்ரி: அசாமில் விளைவிக்கப்படும் பலாப்பழம் மற்றும் பலாப்பழம் துபை நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை, லோகப்ரியா விமான நிலையத்துக்கு, புறப்பட்ட சரக்குப் பெட்டகங்களை துப்ரி துணை ஆணையர் அன்பமுதன் எம்.பி. கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.

அசாமிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து துபைக்கு நேரடியாக விமானம் மூலம் பலாப்பழம் மற்றும் பச்சை மிளகாய் அனுப்பி  வைக்கப்பட உள்ளது.

இந்த சரக்குப் பெட்டகங்களில் 1.5 டன் அளவுக்கு பலாக்காயும் 0.5 டன் பச்சை மிளகாயும் வைக்கப்பட்டுள்ளது. லுலு குழு சர்வதேச நிறுவனம் மூலம் அரபு நாடுகளில் இருக்கும் பலசரக்கு கடைகளில் இந்தப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்படவிருக்கின்றன. 

இந்த நடவடிக்கை முழுவதும் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்புடன், தொழில்நுட்ப ஆதரவு பெற்று நடைபெற்றிருப்பதாக அன்பமுதன் தெரிவித்துள்ளார.

துப்ரி மாவட்டத்துக்கு மட்டுமின்றி, இந்த விவசாய - பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கை தொடங்கிய இந்நாள், ஒட்டுமொத்த அசாம் மாநிலத்துக்கும் சிறப்பு வாய்ந்த நாளாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT