முகப்பு
இந்தியா

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு 1,150ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

இந்தியாவில் ஒரேநாளில் 1,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,30,34,217ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11365 ஆக உள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 83 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். 

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,656 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,194 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,01,196 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 14,79,544 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 185.55 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 4,66,362 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  
இதுவரை மொத்தம் 79.34 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 1,033 நேற்று 1,109ஆக இருந்த பாதிப்பு இன்று 1,150ஆக அதிகரித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.