பள்ளி நேரம் வரும் கல்வியாண்டிலிருந்து ஒரு மணி நேரம் அதிகரிப்பு 
இந்தியா

காசியாபாத் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கரோனா: அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி மூடல்

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளி முதல்வர் வெளியிட்ட கடிதத்தில்,  

காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு கரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த மூன்று நாட்களுக்கு  பள்ளி மூடப்படுகிறது. 

3-ம் வகுப்பு மற்றும் 9.ம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. விசாரித்ததில் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மாணவர்களின் நலன் கருதி பள்ளி நிர்வாகம் திங்கள் முதல் புதன்கிழமை வரை ஆன்லைன் கல்வி முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT