இந்தியா

நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு 861 ஆக குறைந்தது

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக  861 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. சனிக்கிழமை 1,160, ஞாயிற்றுக்கிழமை 1,054 ஆக இருந்த பாதிப்பு இன்று 861 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,132 ஆக உள்ளது. 

கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,691 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரேநாளில் 926 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,03,383 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 11,058 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.03 சதவிகிதமாக குறைந்துள்ளது.  தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.32 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.23 சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 1,85,74,18,827 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,44,870 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 79.41 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  2,71,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT