இந்தியா

100 அடி உயரத்தில் தொங்கியபடி குழந்தையை காப்பாற்றிய விமானப் படையினர்(விடியோ)

DIN

ஜார்கண்ட் ரோப் கார்கள் விபத்தில் சிக்கிய குழந்தையை அந்திரத்தில் தொங்கியபடி விமானப்படையினர் மீட்கும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் திரிகூட் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 2 ரோப் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், அனைத்து ரோப் காா்களும் நடு வழியில் அந்தரத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் நின்று விட்டன.

2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியை துரிதப்படுத்தினா். இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், 3 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 100 அடி உயரத்தில், அந்திரத்தில் தொங்கியபடி விமானப்படை வீரர் ஒருவர்  குழந்தை மற்றும் பெற்றோரை மீட்கும் காணொலியை இந்திய விமானப்படை டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT