பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை
ஐந்து மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவையொட்டி அடுத்து வருகின்ற தோ்தல்களை
புதுதில்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவையொட்டி அடுத்து வருகின்ற தோ்தல்களை எதிர்கொள்ள தோ்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோர் அக்கட்சிக்கு கைகொடுக்க முன்வந்துள்ளார்.
வருகின்ற 2024 - ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலுக்களுக்கான உத்திகளுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் கட்சி தலைவா்கள் முன்னிலையில் பிரசாந்த் கிஷோர் முழு வரையறை விளக்கங்களை சனிக்கிழமை அளித்துள்ளார். இதற்கான ஒரு குழுவை அமைக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில், பிரசாந்த் கிஷோர் உடன் சோனியா காந்தி மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரியங்கா காந்தி, முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோரும் ஆலோசனையில் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.