விசாரணை அதிகாரியை மிரட்டிய வழக்கில் மலையாள நடிகர் திலீப்பின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பிரபல நடிகை ஒருவா் புகாா் தெரிவித்தாா். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த கேரள காவல் துறையினா், மலையாள நடிகா் திலீப் உள்பட 7 பேரைக் கைது செய்தனா். பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட திலீப், பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளை மிரட்டியதாக திலீப் உள்ளிட்ட 6 போ் மீது குற்றத் தடுப்புப் பிரிவினா் ஜனவரி 9ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனா்.
இதனைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரியை மிரட்டியதாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் நடிகர் திலீப் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலீப்பின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து மனுவையும் தள்ளுபடி செய்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.