ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் ராணுவப் பிரிவுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் ராணுவப் பிரிவுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எல்லையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, கர்னா காவல் நிலையத்தின் அதிகாரி முதாசர் அகமது மற்றும் துணை ஆணையர் தலைமையிலான ஒரு குழு, உள்ளூர் ராணுவ பிரிவினருடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்
தாத் கர்னாவைச் சேர்ந்த ஹஜாம் மொஹல்லாவிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகள், 17 கைத்துப்பாக்கிகள், 54 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 5 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெரும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கடத்தப்பட்ட புதிய ஆயுதங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.