குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 
இந்தியா

தில்லி மாநகராட்சி திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

தில்லி மாநகராட்சி திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

DIN

தில்லி மாநகராட்சித் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

தேசிய தலைநகா் தில்லியில் தற்போது வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இதில் வடக்கு, தெற்கில் தலா 104 வாா்டுகளும், கிழக்கில் 64 வாா்டுகளும் என மொத்தம் 272 வாா்டுகள் உள்ளன.

இந்த நிலையில், இந்த மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம்- 2022 மசோதாவை மக்களவையில் மார்ச் 30ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஏப்ரல் 5ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இந்த சட்டத்திற்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, நிலுவையில் உள்ள தில்லி மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT