இந்தியா

சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேர்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோர் இன்று தில்லியில் சந்தித்துப் பேசினார். 

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்தது. மேலும், கட்சியினுள்ளே பல்வேறு பிரச்னைகளும் காணப்படுகின்றன. 

இந்த சூழ்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், அடுத்துவரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிகிறது. 

அதன் ஒருபகுதியாக, தேர்தல் வியூக நிபுணரும் ஐ-பேக் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இன்று தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி உள்ளிட்டோரும் இருந்தனர். 

கடந்த நான்கு நாள்களில் பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியை சந்திப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல்

உ.பி.: அகிலேஷ், மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை!

சந்திரபாபு நாயுடுவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT