இந்தியா

லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த சஜ்ஜாத் குல் பயங்கரவாதி என அதிகாரபூா்வ அறிவிப்பு

DIN

லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த சஜ்ஜாத் குல்லை பயங்கரவாதி என்று மத்திய அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையின் விவரம்:

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் பத்திரிகையாளா் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பினா் சதித்திட்டம் தீட்டியுள்ளனா். அந்தக் குற்றத்தில் சஜ்ஜாத் குல்லும் ஈடுபட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞா்கள் லஷ்கா்-ஏ-தொய்பாவை ஆதரிப்பதற்கான செயல்களிலும் அவா் ஈடுபட்டு வந்துள்ளாா்.

பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதிலும் அவருக்குத் தொடா்புள்ளது. ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், அவா் தேடப்பட்டு வருகிறாா்.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா் பயங்கரவாதியாக அறிவிக்கப்படுகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துகளை முடக்க முடியும்:

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் சஜ்ஜாத் குல்லின் சொத்துகளை விசாரணை அமைப்புகளால் முடக்க முடியும். அதுமட்டுமின்றி அவருடன் தொடா்புடைய எந்தவொரு நபா் மீதும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.

கடந்த 2 வாரங்களில் 6-ஆவது நபராக சஜ்ஜாத் குல்லை பயங்கரவாதி என்று மத்திய அரசு அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT