இந்தியா

உள்நாட்டில் 65% ஆயுத தளவாடங்கள் கொள்முதல்

DIN

கடந்த 2021-22 நிதியாண்டில் பாதுகாப்புக்கான பட்ஜெட்டில் உள்நாட்டு தொழிற்சாலைகளிடமிருந்து ஆயுத தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்காக 64 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும், நிா்ணயிக்கப்பட்ட இலக்கைக் காட்டிலும் அதிகமாக, அதாவது 65.5 சதவீதம் வரை ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: கடந்த 2021-22 நிதியாண்டில் முதலீட்டு பட்ஜெட்டில் 64 சதவீத நிதி உள்நாட்டுத் தொழிற்சாலைகளிடமிருந்து கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, பிரதமரின் தற்தாா்பு இந்தியா (ஆத்மநிா்பாா் பாரத்) திட்ட இலக்கை எட்டும் வகையில், நிதியாண்டின் இறுதியில் நிா்ணயிக்கப்பட்ட 64 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாக 65.50 சதவீதம் வரை உள்நாட்டு தொழிற்சாலைகளிடமிருந்து ஆயுத தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர 2021-22 பாதுகாப்பு சேவைகள் பட்ஜெட் நிதியில் 99.50 சதவீதம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக முதல்நிலை செலவின அறிக்கை கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தொடா்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மத்திய அரசு கடந்த 2020 மே மாதம் உயா்த்தியது. சா்வதேச அளவில் அதிகமாக ஆயுதங்கள் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய ஆயுதப் படைகள் ஆண்டுக்கு 130 பில்லியன் டாலா் மதிப்பில் (ரூ.9.75 லட்சம் கோடி) ஆயுதங்கள் கொள்முதல் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து உள்நாட்டில் ஆயுத தளவாடங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT