இந்தியா

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம்: அமித் ஷா

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம் என்றும், உரிமைகளைப் பாதுகாக்கும் அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 

DIN

மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம் என்றும், உரிமைகளைப் பாதுகாக்கும் அச்சுறுத்தலை வேரறுக்க வேண்டியது அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 

தேசிய புலனாய்வு அமைப்பின் 13வது நிறுவன தினவிழாவில் உரையாற்றிய அமித்ஷா, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்ததற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியுள்ளன.

பயங்கரவாதத்தை விட மனித உரிமை மீறல் இருக்கமுடியாது என்று நான் நம்புகிறேன். மனித உரிமை மீறலின் மிகப்பெரிய வடிவம் பயங்கரவாதம். மனித உரிமைகளைப் பாதுகாக்கப் பயங்கரவாதத்தை வேரறுப்பது முற்றிலும் அவசியம். 

நரேந்திர மோடி அரசு பயங்கரவாதத்தை சகிப்புத்தன்மையற்ற கொள்ளையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும். இந்தியாவிலிருந்து அச்சுறுத்தலை வேரறுக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். 

ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பதிவு செய்த பயங்கரவாத வழக்குகள் காரணமாக, அங்கு பயங்கரவாத செயல்களுக்கு நிதி வழங்குவது தற்போது மிகவும் கடினமாகிவிட்டது. 

பயங்கரவாத அமைப்புகளின் தரைவழி தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததற்காகவும், அங்குள்ள பயங்கரவாதத்தின் தளவாட மற்றும் விநியோகச் சங்கிலிகளை முடக்கியதற்காகவும் தேசிய புலனாய்வு அமைப்பை உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT