முகப்பு
இந்தியா

தில்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

தில்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, விதிமீறலுக்கு ரூ.500 அபராதம் என்று அறிவித்துள்ளது.

Updated On : 22 ஏப்ரல், 2022 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: தில்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, விதிமீறலுக்கு ரூ.500 அபராதம் என்று அறிவித்துள்ளது. இந்த அபராதம் 4 சக்கர வாகனங்களில் ஒன்றாகப் பயணிப்பவர்களுக்கு அபராதம் இல்லை  எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது 

தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க முடிவு செய்தது.

நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.