இந்தியா

அரசு மரியாதையுடன் பிரிட்டன் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி

DIN

இந்தியா வருகை தந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அரசு மரியாதை அளித்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். 

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், 2 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று குஜராத்தின் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். 

தொடர்ந்து இன்று தில்லி சென்ற அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சனும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.  

அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன், தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியா -பிரிட்டன் இடையேயான நல்லுறவு, வணிகம் உள்ளிட்டவை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் பேசவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT