இந்தியா

தில்லியின் கல்வி மாதிரியை பஞ்சாப் அரசும் பின்பற்றும்: பகவந்த் மான்

DIN

அனைத்து பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களும் தரமான கல்வியைப் பெறும் தில்லியின் கல்வி மாதிரியை பஞ்சாப் அரசும் பின்பற்றும் என்று முதல்வர் பகவந்த் மான் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இரண்டு நாள் பயணமாக தனது மூத்த அதிகாரிகளுடன் தில்லிக்கு வந்துள்ளார் மான். தேசிய தலைநகரில் உள்ள சுகாதார நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று "தில்லி மாதிரியை" புரிந்துகொண்டு அதை மாநிலத்தில் பின்பற்ற உள்ளார். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணைத் தலைவர் மணீஷ் சிசோடியா ஆகியோர் சிராக் என்கிளேவில் உள்ள தில்லி அரசுப் பள்ளிக்கு முதல்வர் மான்-வுடன் சென்றனர்.

கல்வி முறையில் ஏற்பட்டுள்ள புரட்சி நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. பணக்கார மற்றும் ஏழை பின்னணியில் உள்ள மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தரமான கல்வியைப் பெறும் அதே மாதிரியை பஞ்சாபிலும் நாங்கள் பின்பற்றுவோம். ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதன் மூலம் நாடு முன்னேறும் என்று மான் கூறினார்.

நாட்டின் கல்வி முறையை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கேஜரிவால் கூறினார்.

பஞ்சாப் முதல்வருடன் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைகள் ஆகிய இரு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், முக்கியமான இரண்டு துறைகளில் உள்ளீடுகளைப் பெற உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT