மகாராஷ்டிரத்தில் ஏடிஎம் இயந்திரத்தையே ஜேசிபியில் அள்ளிய கும்பல்: ஆனால் என்ன? 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஏடிஎம் இயந்திரத்தையே ஜேசிபியில் அள்ளிய கும்பல்: ஆனால் என்ன?

மகாராஷ்டிர மாநிலத்தில், ஏடிஎம் இயந்திரத்திலிருக்கும் பணத்துக்காக, இயந்திரத்தை அப்படியே ஜேசிபி இயந்திரம் மூலம் திருடியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN


சாங்லி: மகாராஷ்டிர மாநிலத்தில், ஏடிஎம் இயந்திரத்திலிருக்கும் பணத்துக்காக, இயந்திரத்தை அப்படியே ஜேசிபி இயந்திரம் மூலம் திருடியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஏடிஎம்மில் இருக்கும் சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியருந்தது. அதுந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை, ஜேபிசியைக் கொண்டு கொள்ளைக் கும்பல் ஒன்று அப்படியே தகர்த்து, தரையோடு பெயர்த்து எடுத்துச் செல்வதுபதிவாகியுள்ளது

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மையத்தில் இது நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் நல்வாய்ப்பாக, ஜேபிசி இயந்திரம் சாலையிலிருந்து குழியில் சிக்கிக் கொண்டதையடுத்து, கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தையும் ஜேபிசியையும் அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், ஏடிஎம் இயந்திரத்தைக் கைப்பற்றினர். அதிலிருந்த 27 லட்சம் பணம் காப்பாற்றப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கொள்ளையர்களை தேடிவருகிறார்கள். பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை கொள்ளையர்கள் திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் பலரும் தங்களது பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை

ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT