இந்தியா

நேதாஜியின் செய்தியை பரப்புவதற்கு 2,500 கி.மீ சைக்கிள் பயணம் செய்யும் 10 வயது சிறுவன்

DIN

குழந்தைகள் பொதுவாக கார்ட்டூன்கள் பார்ப்பதிலும், விடியோ கேம் விளையாடுவதிலும் பிஸியாக இருக்கும் இந்த வயதில், தில்லியைச் சேர்ந்த 10 வயது அரப் பரத்வாஜ் நேதாஜியின் செய்தியை பரப்புவதற்காக 2,500 கி.மீ சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

ஆறாம் வகுப்பு மாணவரான அரப், கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

இதுகுறித்து சிறுவன் அரபு கூறுகையில், 

இந்தியாவின் சுதந்திரத்திற்காக போஸின் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். நான் 2-ம் வகுப்பு படிக்கும் போது என் தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார். 

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல புத்தகங்களை எனக்குக் கொடுத்தார். அப்போதுதான் நேதாஜி மற்றும் அவர் நாட்டுக்காகப் போராடியதால் ஈர்க்கப்பட்டேன். இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு மற்றும் நேதாஜியின் 125-வது பிறந்தநாளில் ஏதாவது செய்ய விரும்பினேன். 

மருத்துவரான அவரது தந்தை அதுல் எம் பரத்வாஜுடன் செவ்வாய்க்கிழமை தனது சைக்கிளில் மேற்கு வங்கத்தில் உள்ள அலிபுர்துவாரை அடைந்துள்ளோம். 

இந்த பயணத்தில், தந்தையுடன் சைக்கிள் பயணம் பற்றிய என் யோசனையை எனது குடும்பத்தினர் ஆதரித்ததாக சிறுவன் கூறினார். புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் இந்த சைக்கிள் பயணம் முடிவடையும். தேசிய ஒற்றுமையின் செய்தியைப் பரப்புவது நோக்கமாகக் கொண்டுள்ளதாகச் சிறுவன் தெரிவித்தார். 

எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர விரும்புவதாகவும், நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புவதாகவும் அரபு கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT