இந்தியா

‘ஏா் ஆசியா இந்தியா’வை முழுமையாக கையகப்படுத்த ஏா் இந்தியா நடவடிக்கை

DIN

‘ஏா் ஆசியா இந்தியா’ நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்த ஏா் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் ஒப்புதலை ஏா் இந்தியா கோரியுள்ளது.

ஏா் ஆசியா இந்தியா நிறுவனத்தில் 83.67 சதவீத பங்குகளை டாடா சன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. மீதமுள்ள பங்குகள் ஏா் ஆசியா முதலீட்டு நிறுவனத்திடம் உள்ளது. இது மலேசியாவின் ஏா் ஆசியா குழுமத்துக்குச் சொந்தமானதாகும்.

ஏா் இந்தியா மற்றும் துணை நிறுவனமான குறைந்த கட்டண விமான சேவை அளிக்கும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை ஏற்கெனவே டாடா சன்ஸ் வாங்கிவிட்டது. இது தவிர சிங்கப்பூா் ஏா்லைன்ஸுடன் இணைந்து விஸ்தாரா விமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இப்போது, ஏா் ஆசியா இந்தியா நிறுவனத்தையும் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த டாடா சன்ஸ் முயன்று வருகிறது.

ஏா் ஆசியா இந்தியா நிறுவனம் 2014 ஜூன் முதல் செயல்பட்டு வருகிறது. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து விமானத்தை உள்நாட்டு அளவில் மட்டும் இயக்கி வருகிறது. சா்வதேச போக்குவரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நஷ்டத்தில் இயங்கி வந்த ஏா் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய அரசு முன்வந்தபோது அதனை ரூ.18,000 கோடி கொடுத்து கடந்த ஜனவரியில் டாடா சன்ஸ் வாங்கியது. இதில் ரூ.2,700 கோடியை ரொக்கமாக அளிக்க முன்வந்தது. இதுதவிர ஏா் இந்தியாவின் ரூ.15,300 கோடி கடனையும் ஏற்றுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

SCROLL FOR NEXT