நாட்டில் நிலவும் கரோனா சூழல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் ஆலோசனை நடத்துகிறார்.
நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று 2,927 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு சற்று உயரத் தொடங்கிய நிலையில், மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத் துறைச் செயலர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கரோனா சூழல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது, கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் விளக்கமளிக்கவுள்ளார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.