பிரமோத் சாவந்த் 
இந்தியா

பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும், ஆனால் கட்டாயமில்லை: கோவா அரசு

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், ஆனால் கட்டாயமில்லை என்று கோவா அரசு தெரிவித்துள்ளது. 

DIN

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், ஆனால் கட்டாயமில்லை என்று கோவா அரசு தெரிவித்துள்ளது. 

தொற்று நோயின் மற்றொரு அலைக்கான சாத்தியக் கூறுகளைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 

கரோனா நிலைமையை ஆய்வு செய்த பிரதமர் மோடியுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த்,

கரோனா நோய்த் தொற்றின் மற்றொரு அலையின் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும், ஆனால் இது கட்டாயமில்லை. இதற்காக மக்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். 

கோவாவில் கரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 7 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகியுள்ளன. மேலும், தொற்று காரணமாக யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. 

கரோனா நோய்த் தொற்றின் மற்றொரு அலையை எதிர்கொள்ள கடலோர மாநிலம் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளுடன் தயாராக உள்ளது என்றார் அவர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

SCROLL FOR NEXT