இந்தியா

மாநிலங்களுக்கு 8 மாத ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும்

DIN

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் 10 மாதங்களுக்கான (ஏப்ரல்- ஜனவரி) ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மாநில அரசுகளுக்கு அதே ஆண்டிலும், பிப்ரவரி- மாா்ச் வரையிலான இழப்பீட்டுத் தொகை அடுத்த நிதியாண்டிலும் விடுவிக்கப்படும்.

இதில், 2021-22 ஆண்டுக்கான 10 மாத இழப்பீட்டுத் தொகையில், 8 மாதங்களுக்கான நிதி மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் உள்ளது. வரி வருவாய் கிடைத்ததும் இந்தத் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப் பின்னணி கதையில் சிவகார்த்திகேயன்?

அபார பந்துவீச்சால் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த அமெரிக்கா; காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்!

ரஷிய மருத்துவ பல்கலை.யில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து!

எடப்பாடி பழனிசாமிக்கு இனியும் தோல்விதான்: முதல்வர் ஸ்டாலின்

வித் லவ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT