இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒன்றாக இருக்க முடியாது: ராகுல் காந்தி
இந்தியாவில் இருந்து சில சர்வதேச நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
புது தில்லி: இந்தியாவில் இருந்து சில சர்வதேச நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை தாக்கி சுட்டிரையில் கூறினார். மேலும் இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒன்றாக இருக்க முடியாது என்று கூறினார்.
ராகுல் காந்தி நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசினார் மற்றும் வேலையின்மை நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமரை வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவும் சூழலால் 7 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டன. 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறினார்.
Advertisement
Advertisement
நாட்டை விட்டு வெளியேறிய ஏழு சர்வதேச நிறுவனங்களை காட்டும் படத்தை ராகுல் காந்தி சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.