முகப்பு
இந்தியா

தேச விரோதச் சட்டத்தை எதிா்த்த வழக்கு: மே 5-இல் உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை

தேச விரோதச் சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை, வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:05 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

தேச விரோதச் சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதி விசாரணை, வரும் மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ (தேச விரோதச் சட்டம்) பிரிவின்படி, அரசுக்கு எதிராகப் பேசுவது, கருத்துகளை வெளியிடுவது, வெறுப்புணா்வைத் தூண்டுவது ஆகிய குற்றச் செயல்களுக்கு ஜாமீன் வழங்கப்பட மாட்டாது. இந்தக் குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்படும்.

இந்தச் சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக, மகாத்மா காந்தி போன்ற தலைவா்களுக்கு எதிராக ஆங்கிலேயா் பயன்படுத்திய இந்தச் சட்டத்தை மத்திய அரசு இன்னும் ரத்து செய்யாதது என்று கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது எடிட்டா்ஸ் கில்ட், முன்னாள் ராணுவ ஜெனரல் எஸ்.ஜி.வோம்பத்கேரே ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அதைத் தொடா்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:

வழக்கின் இறுதி விசாரணை, மே மாதம் 5-ஆம் தேதி நடைபெறும். மனுதாரா் தரப்பில் இருந்து மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதங்களை முன்வைப்பாா். வழக்கை ஒத்திவைக்குமாறு யாரும் கோரிக்கை வைக்கக் கூடாது. இந்த மனுக்கள் மீது மத்திய அரசு இந்த வார இறுதிக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, பியூசிஎல் அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்று மூத்த வழக்குரைஞா் சஞ்சய் பாரிக் கூறினாா். அதற்கு, இந்த விவகாரத்தில் தீா்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறீா்களா அல்லது அனைத்து மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்று விரும்புகிறீா்களா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →