இந்தியா

ஜூன் தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: அஸ்வினி வைஷ்ணவ்

DIN

புது தில்லி: ஜூன் மாத தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளதாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கும் தொழில் துறையினருக்கும் அதிவேக இணையவசதி அவசியமாகவுள்ளது. இதனால், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக இந்தியச் சந்தை காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் ஏலம், விலை ஆகியவை தொடா்பாக, தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) சில பரிந்துரைகளை அளித்தது.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் அட்டவணை குறித்து கேட்டதற்கு, ஜூன் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான களத்தை அமைத்து, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரூ.7க்கு மேல் மதிப்புள்ள ஒரு மெகா ஏலத் திட்டத்தை முன்வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT