இந்தியா

நீயா பட பாணியில் பழிவாங்கத் துடிக்கும் பாம்பு: 7 முறை கடிபட்டவரின் கதை

IANS

மிர்ஸாபூர்: உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஸாபூரில், தனது துணையைக் கொன்றவரைப் பழிவாங்கத் துடிக்கும் பாம்பிடம் 7 முறை கடிபட்டவரைப் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பப்லுவை இரண்டு பாம்புகள் தாக்கின. தன்னை தற்காத்துக் கொள்ள அவற்றை பப்லு தாக்கிய போது, இரண்ட இணை பாம்புகளில் ஒன்று கொல்லப்பட்டது. 

அதுநாள் முதல், தப்பியோடிய அதே பாம்பு தன்னை ஏழு முறை கடித்துவிட்டதாகவும், நல்வாய்ப்பாக நான் உயிர்பிழைத்துக் கொண்டேன் என்றும் கூறுகிறார்.

நான் தனியாக வேலை செய்யும் போதெல்லாம் எனக்கு காலில் ஏதோ கடிப்பது போல இருக்கும். பார்த்தால் பாம்பு பல் தடம் பதிந்திருக்கும். சில முறை பாம்பு கடித்துவிட்டு ஓடும் போது பார்ப்பேன். அதே பாம்புதான். 

தனது இணை பாம்பை கொன்றுவிட்டதால், பாம்பு பழிவாங்கும் விதமாக பப்லுவை கடிப்பதாகவும், வழக்கமாக பாம்புகளுக்கு இந்த பழிவாங்கும் குணமிருக்கும் என்று உள்ளூர் பாம்பு பிடிப்பவர் கூறுகிறார்.

அந்த பாம்பு வயதானது போல தெரிகிறது. அதன் பற்களில் விஷமில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும், அதன் பழிவாங்கும் குணத்தை விட முடியவில்லை என்கிறார் பப்லு.

பாம்பை சாந்திப்படுத்த பூஜைகள் செய்யுமாறு கிராம மக்கள் பப்லுவிடம் கூறுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தன்னிடம் பணமில்லை என்று கூறும் பப்லு, என்னை பாம்பு கொன்றால் கொல்லட்டும் என்கிறார் சிரித்தபடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT