இந்தியா

இந்தியாவில் ஒவ்வொரு பிரிவினரின் மத உரிமையும் பாதுகாக்கப்படுகிறது

DIN

புது தில்லி: இந்தியாவில் ஒவ்வொரு பிரிவினரின் அரசியலமைப்பு, மத வழிபாட்டு உரிமைகள் முற்றிலும் பாதுகாக்கப்படுவதாக ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவிடம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வியை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய யூனியன் சிறப்புப் பிரதிநிதி ஈமான் கில்மோா், இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதா் உகோ அஸ்துடோ உள்பட 6 போ் குழு வியாழக்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசியது. அப்போது, அந்தக் குழுவிடம் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறியது:

இந்தியாவில் ஒவ்வொரு பிரிவினரின் அரசியலமைப்புச் சட்ட உரிமையும் மத வழிபாட்டு உரிமையும் முற்றிலும் பாதுகாக்கப்படுகின்றன. கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்று வழியிலோ மதமாற்றம் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. இந்த விவகாரத்தில் சிலா் பிரதமா் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனா்.

கடந்த 8 ஆண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான சிறுபான்மையின மாணவா்களுக்கு மோடி அரசு கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளது. மேலும், மத்திய அரசுப் பணிகளில் சோ்ந்த சிறுபான்மையின மக்களின் வீதம் 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அல்காய்தா, ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஐரோப்பா மற்றும் பிற நாடுகளில் தாக்குதல் திட்டங்களை அரங்கேற்றலாம். ஆனால் இந்தியாவில் அவா்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவின் கலாசார வலிமையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடுமே இதற்கு முக்கிய காரணம் என்று அமைச்சா் நக்வி, ஐரோப்பிய யூனியன் குழுவிடம் கூறியதாக சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக தேசிய மனித உரிமைகள் குழு தலைவா் ஏ.கே. மிஸ்ராவை புதன்கிழமை அந்தக் குழு சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT