இந்தியா

நாடாளுமன்றத்தில் 3-வது வாரமாக தொடரும் அமளி

DIN

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மூன்றாவது வாரம் முதல் நாளான இன்று காலை, மக்களவை கூடியவுடன் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்தை கைது செய்ததாக கூறியும், காங்கிரஸ் எம்.பி.க்கள் நான்கு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து, பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது முதல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி, பணவீக்கம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT