மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம் 
இந்தியா

மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை வன்கொடுமைக்குள்ளாகி.. தற்போது புதிய அவதாரம்

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, தற்போது புதிய வாழ்க்கையில் கல்லூரி மாணவியை அடியெடுத்து வைத்துள்ளார்.

ENS


கொல்கத்தா: சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்களுக்காக வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு நேரிடும் அபாயங்களுக்கு மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் மூன்று முறை விற்கப்பட்டு, பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, தற்போது புதிய வாழ்க்கையில் கல்லூரி மாணவியாக அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரங்களை ஒரு சில வரிகளில் முடித்துவிடலாம். ஆனால், அதனால் ஏற்பட்ட வலிகளை..

குற்றச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிஐடி காவல்துறையினர் கூறுகையில், கடந்த நான்கு மாதங்களில், அப்பெண், மனிதர்களைக் கடத்தும் வெவ்வேறு கும்பலிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் மூலம் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணை விட 30 வயது அதிகம் கொண்ட நபர் ஒருவர் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலர் உள்பட 6 பேர் பிகார், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களிலிருந்து கைது செய்யப்பட்டனர். 22 வயதாகும் இப்பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது.

இந்த கொடூரப் பயணம், 7 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளியில் இந்தப் பெண் படித்துக் கொண்டிருந்தபோது சமூக வலைத்தளத்தில் பிகாரைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறியபோது தொடங்கியது.  அதன்பிறகு பலரிடம் விற்கப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் மீட்டுள்ளனர். 

தொடர் சிகிச்சையின் பயனாக அவர் குணமாகி, தனக்கு நடந்த அநீதியை வெளியே சொல்ல குற்றவாளிகள் சிறைக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே, அப்பெண் தனது பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரிக்குள் நுழைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT