இந்தியா

உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் யாசின் மாலிக்

DIN

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தலைவரான யாசின் மாலிக்கை பயங்கரவாதத்துக்கு நிதி கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதுவின் மகள் ரூபியா சயீது 1989-இல் கடத்தப்பட்ட வழக்கில் ஜம்முவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாா். எனினும் அதற்கு மத்திய அரசிடமிருந்து உரிய பதில் வராத நிலையில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து,  யாசின் மாலிக்கின் உடல்நிலை மோசமடைந்ததால் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள ராம் மனோகர் லால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய கோரிக்கைகளை உயர் அதிகாரிகள் பெற்றுக்கொண்டதால் யாசின் மாலிக் தன் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT