காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது முகநூல், சுட்டுரை (ட்விட்டர்) பக்கத்தின் முகப்புப் படங்களை மாற்றிய நிலையில், ராகுல் காந்தியும் இன்று மாற்றியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படங்களாக வைக்கக் கோரினார். தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13- 15 வரை ஆகிய 3 நாள்கள் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன
சுதந்திர நாளையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது சுட்டுரைப் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். தனது படத்தை நீக்கிவிட்டு, முன்னாள் பிரதமர் நேரு தேசியக் கொடியை ஏந்தியவாறு உள்ள படத்தை முகப்பில் மாற்றியுள்ளார்.
மேலும், சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், மூவர்ணக் கொடி நாட்டின் பெருமை. அது இந்தியக் குடிமக்கள் அனைவரின் இதயத்திலும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.