உச்ச நீதிமன்றம் 
இந்தியா

'தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’: உச்ச நீதிமன்றம்

சிவசேனை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: சிவசேனை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரை தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவசேனை கட்சிக்கு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே உரிமைக் கோரும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர அரசியல் குழப்ப வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது பற்றி திங்களன்று(ஆகஸ்ட் 8) நீதிமன்றம் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

இந்நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அரசமைப்பு சட்டம் சாா்ந்த பிரச்னைகள் தொடா்பாக, சிவசேனை அதிருப்தி அணியினா் தங்களது பதில்களை மாற்றியமைத்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT