இந்தியா

அமலாக்கத்துறை விசாரணையில் மல்லிகார்ஜுன கார்கே!

DIN

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கடந்த நான்கரை மணி நேரமாக அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது'  என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், புதன்கிழமை தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனா். 

யங் இந்தியா அலுவலகம் சீலிடப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், சோனியா காந்தி இல்லத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT