தில்லிக்கு செல்லும் மம்தா பானர்ஜி, இது தான் காரணமா?
நான்கு நாள்கள் பயணமாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஆகஸ்ட் 4) தில்லி செல்கிறார்.
நான்கு நாள்கள் பயணமாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (ஆகஸ்ட் 4) தில்லி செல்கிறார்.
இந்த பயணத்தின்போது மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்கிறார்.
இதையும் படிக்க: அந்த ஒருநாள்: ஞாயிறன்று என்ன செய்ய வேண்டும்? உழைப்பா? ஓய்வா?
Advertisement
Advertisement
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவரது கட்சியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களை தில்லியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் அவரது இல்லத்தில் சந்திக்கிறார். இன்று மாலை தில்லி சென்றடைந்த பிறகு இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜி முக்கியமாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே தில்லி செல்கிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நான்கு நாட்களில் நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை அவர் சந்திக்க உள்ளார். தனது பயணத்தினை முடித்துக் கொண்டு அவர் வருகிற திங்கள் கிழமை மீண்டும் மேற்கு வங்கம் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.