இந்தியா

நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் தைவானை சீனாவிடம் விட்டுக் கொடுத்தோம்: சுப்பிரமணியன் சுவாமி

DIN

நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான  சுப்பிரமணியன் சுவாமி புதன்கிழமை, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரை விமர்சித்துள்ளார், மேலும் அவர்களின் முட்டாள்தனத்தால் திபெத் மற்றும் தைவானை சீனாவின் ஒரு பகுதி என்பதை இந்தியர்கள் ஒப்புக்கொண்டர் என்று கூறினார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் முட்டாள்தனத்தால் திபெத்தையும், தைவானையும் சீனாவின் ஒரு பகுதி என்று இந்தியர்களாகிய நாம் ஒப்புக்கொண்டோம். ஆனால் இப்போது சீனா பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்ஏசியை மதிப்பதில்லை மற்றும் லடாக்கின் சில பகுதிகளை கைப்பற்றியது. யாரும் வரவில்லை என்று மோடி மயக்கத்தில் இருக்கிறார். நாம் முடிவு செய்ய தேர்தல்கள் உள்ளன என்பதை சீனா தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

சீனாவின் பலமுறை 'எச்சரிக்கைகளை' மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றிருந்த நிலையில் சுவாமியின் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

SCROLL FOR NEXT