கோப்புப்படம் 
இந்தியா

பிகாரில் படகில் தீ விபத்து: 5 தொழிலாளர்கள் பலி

பிகாரில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

DIN

பிகாரில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர். 

பிகார் மாநிலம், ராம்பூர் தியாரா காத் பகுதியில் உள்ள ஏரியில் படகு மூலம் சட்டவிரோதமாக மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது படகில் சமயல் செய்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 5 பேர் பலியானார்கள். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில் டீசல் கேன்களுக்கு அருகே சமயல் செய்ததால் தீவிபத்து ஏற்பட்டதாகவும் பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

திருவள்ளூர்: ரூ.1.05 கோடியில் 95,000 மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டம்

கணவரை காா் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி: மனைவி கைது

தொழில்நுட்பப் பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,737 போ் பங்கேற்பு

வாணியம்பாடி: மாவட்ட பாஜக அலுவலகத்தில் இல.கணேசனுக்கு அஞ்சலி

SCROLL FOR NEXT