இந்தியா

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் மோடி அஞ்சலி

DIN

தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தவர்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.

ஆங்கிலேய ஆட்சியாளா்களால் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினையின்போது மக்களின் போராட்டம் மற்றும் உயிா்த்தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்தாா்.

இந்நிலையில், தேசப் பிரிவினை துயரங்கள் நாளையொட்டி பிரதமர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், “தேசப் பிரிவினையின்போது உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். நமது வரலாற்றின் துயா்நிறைந்த இந்த காலகட்டத்தை கடந்து வந்தவா்களின் மனவலிமையும் உறுதியும் பாராட்டுதலுக்குரியது”என்று மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT