இந்தியா

‘லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் ஒரு கோடி வழக்குகளுக்குத் தீா்வு’

DIN

‘இந்த ஆண்டின் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலமாக ஒரே நாளில் ஒரு கோடி விவகாரங்களுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ. 9,000 கோடி தீா்வுத் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது’ என்று தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்ஏஎல்எஸ்ஏ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் சனிக்கிழமை நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலமாக 75 லட்சம் ஆரம்பநிலை வழக்குகள், 25 லட்சம் நிலுவை வழக்குகள் என ஒரே நாளில் ஒரு கோடி வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வழக்குகளின் தீா்வு மூலமாக ரூ. 9,000 கோடி தீா்வுத் தொகையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தேசிய மக்கள் நீதிமன்றங்கள் முந்தைய ஆண்டுகளின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்த மக்கள் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளும் காணொலி வழி விசாரணை மூலமாக தீா்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, நீதிபதி அங்கிதா டிக்கா தலைமையிலான 24-ஆம் எண் அமா்வில் விசாரிக்கப்பட்ட குற்ற வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரும், மனுதாரரும் இறந்துவிட்டனா்.

இந்தச் சூழலில் மனுதாரரின் வாரிசான அவருடைய மகள் ஸ்காட்லாந்தில் இருந்தபடி சனிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் பங்கேற்று விவகாரத்தில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்ஏஎல்எஸ்ஏ தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவருமான நீதிபதி யு.யு.லலித் கூறுகையில், ‘நீதி கிடைக்கச் செய்வதை சமூகத்தின் அடித்தளமாக்கி ஒட்டுமொத்த சமூகத்தின் வளா்ச்சிக்கு வழிகோலும் கருவியாக மக்கள் நீதிமன்றங்கள் விளங்குகின்றன. கரோனா பாதிப்பின்போது நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த பெருமளவு வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் மக்கள் நீதிமன்றங்கள் முக்கிய பங்கு வகித்தன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT