கோப்புப்படம் 
இந்தியா

19 மணி நேரமாக கழிப்பறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட சிறுவன்

அரசு துவக்கப் பள்ளியின் கழிப்பறைக்குள் மாணவர் இருப்பது தெரியாமல் பூட்டப்பட்ட நிலையில், 19 மணி நேரம் மாணவர் கழிப்பறையிலேயே சிக்கித்தவித்த விவகாரம் வெளியாகியுள்ளது.

DIN

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள அரசு துவக்கப் பள்ளியின் கழிப்பறைக்குள் மாணவர் இருப்பது தெரியாமல் பூட்டப்பட்ட நிலையில், 19 மணி நேரம் மாணவர் கழிப்பறையிலேயே சிக்கித்தவித்த விவகாரம் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விடியோ தற்போது வெளியானதைத் தொடர்ந்து இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலா பகுதிக்கு உள்பட்ட கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று குடும்பத்தினரை பள்ளி தரப்பில் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரௌலி ஷிவ் கிராமத்தில் ஆறாம் வகுப்புப் படித்து வந்த சிறுவன், 2 மணிக்கு கழிப்பறைக்குச் சென்றுள்ளான். அவர் கழிப்பறை சென்றது தெரியாமல், பள்ளியை மூடிய ஆசிரியர்கள், கழிப்பறையையும் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.

மகன் வராததால் அங்கும் இங்கும் தேடிய பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கியுள்ளனர். மறுநாள் காலை பள்ளியைத் திறந்த போதுதான் சிறுவன் கழிப்பறையில் இருந்ததுதெரிய வந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமை ஆசிரியரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT