இந்தியா

கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள்

DIN

பாஜகவின் மேலிடப் பொறுப்புகளிலிருந்து மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.

பாஜகவின் உயர்மட்ட குழுவின் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது. கட்சியின் உட்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 

மேலும் பாஜக நாடாளுமன்றக் குழுவில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,  சர்பானந்தா சோனோவால், கே லக்‌ஷ்மன், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யநாராயண் ஜாடியா உள்ளிட்டவர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT