குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு 
இந்தியா

திரிபுரா மஹாராஜ் கல்லூரியின் பவள விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு?

திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பவள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார். 

PTI

திரிபுராவின் மஹாராஜ் பிர் பிர்காம் கல்லூரியில் நடைபெறும் பவள விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்தார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 

புதன்கிழமை நிகழ்ச்சிக்கான ஆயத்த கூட்டத்திற்குத் தலைமை வகித்த நாத், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வருகை சிறப்பானதாக இருக்கும் என்றார். 

செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தின விழாவைக் குறிக்கும் வகையில் பேரணி நடத்தப்படும். மேலும் மாநில அளவிலான ஆசிரியர் தின நிகழ்ச்சியும் எம்பிபி கல்லூரி வளாகத்தில் நடைபெறும். 

மாநிலத்தின் பழமையான கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஓவியப் போட்டி, கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் எஸ்என் ஆர்யா மற்றும் முதல்வர் மாணிக் சாஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று அவர் கூறினார்.

செப்டம்பர் 9 ஆம் தேதி எம்பிபி கல்லூரியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தில் பங்கேற்குமாறு முதல்வர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

SCROLL FOR NEXT