இந்தியா

விவசாயிகளுக்கு உதவுவதில் மற்ற அரசுகள் செய்யாததைச் செய்தவர் மோடி: ஜெ.பி.நட்டா

PTI

விவசாயிகளுக்கு உதவுவதில் மற்ற அரசு செய்யாததைச் செய்தவர் மோடி என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். 

ஹிமாச்சலில் சிர்மூர் மாவட்டத்தில் உள்ள பௌண்டா சாஹிப்பில் உள்ள மாநகராட்சி கவுன்சில் மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெ.பி. நட்டா உரையாற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது, 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் விவசாய பட்ஜெட்டை நான்கு மடங்கு உயர்த்தி விவசாயிகளுக்கு அதிகளவில் உதவியுள்ளதாக அவர் கூறினார். 

தற்போதைய ஆட்சியில் விவசாயிகளுக்கு செய்தது போன்று வேறு எந்த அரசாங்கமும் செய்யவில்லை என்று அவர் கூறினார். 

விவசாயிகள் போராட்டம் குறித்து மற்ற எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசி வருகின்றனர், ஆனால் மோடி அரசு மட்டும் தான் விவசாயிகளுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறது. 

நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் விவசாய பட்ஜெட் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் வெறும் ரூ.33,000 கோடியிலிருந்து,  தற்போது ரூ.1,33,000 கோடியாக உயர்ந்துள்ளது. 

2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு நாடு ஒற்றுமையாக வளர வேண்டும். 

உலகிலேயே பழமையான நமது பாரம்பரியம் மற்றும் இந்திய கலாசாரத்தை நாம் எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT