இந்தியா

ம.பி.யில் லாரி-வேன் மோதல்: 4 பள்ளி மாணவர்கள் பலி, 11 பேர் காயம்

DIN


மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் லாரி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். 11 பேர் கயாமடைந்தனர். 

நாக்டாவில் உள்ள பாத்திமா கான்கென்ட் பள்ளிக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருந்தபோது. உன்ஹெல் நகரில் உள்ள ஜிர்னியா பாடா அருகே பள்ளி வேன் மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் மற்றும் 11 பேர் காயமந்தனர் என்று உஜ்ஜையினி காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர சுக்லா தெரிவித்தார். 

காயமடைந்த மாணவர்கள் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி கூறினார். 

இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

சுற்றுவாரியாக மின்னணு திரையில் முடிவுகள் வெளியீடு: ஆட்சியா்

SCROLL FOR NEXT